முகப்பு / மருத்துவக் காப்பீடு / மருத்துவ பராமரிப்பு

அனைவருக்குமான மருத்துவ பராமரிப்பு காப்பீட்டு பாலிசி

இந்த பெருந்தொற்றில், எச்டிஎஃப்சி எர்கோ கொரோனா வைரஸுக்கு எதிராக போராட மருத்துவ காப்பீட்டை ஒரு கவசமாக உருவாக்குவதன் மூலம் உங்களை கவனித்துக்கொள்கிறது. 10,000+ ரொக்கமில்லா நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் உடனடி கோரல் செட்டில்மென்ட் பாலிசிகளுடன், பராமரிப்பு எப்போதும் அணுகக்கூடியது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். தனிநபர், குடும்பம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வழங்குவதன் மூலம், உங்களுக்கு எப்போதும் அதிகரித்து வரும் அனைத்து மருத்துவ தேவைகளையும் கவனித்துக்கொள்கிறோம். நாங்கள் #1.3 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம், மேலும் அனைவருக்கும் வடிவமைக்கப்பட்ட எங்கள் சரியான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மேலும் பல உயிர்களைப் பாதுகாப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் வாழ்க்கை முறை, நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பரிந்துரைக்கப்பட்ட மை:ஹெல்த் சுரக்ஷா இன்சூரன்ஸ் முதல் அதிக தேவை உள்ள கொரோனா கவாச் பாலிசி வரை எங்கள் அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் மருத்துவ பணவீக்கத்துடன் இணையும் காப்பீட்டை வழங்குகின்றன. எங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மற்றும் அவை உங்களை எப்படிக் கவனித்துக்கொள்கின்றன என்பது பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

எச்டிஎஃப்சி உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது

பெற்றோர் பராமரிப்பு
வயது வரம்பு கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்நாள் புதுப்பித்தல் இல்லாமல், எங்கள் பெற்றோர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மிகவும் தேவைப்படும்போது எளிதாகவும் வசதியாகவும் கிடைக்கப்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடும்ப பராமரிப்பு
உங்கள் வாழ்க்கை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே சுழல்கிறது, பிறகு ஏன் உங்கள் அன்பானவர்களை விரிவான குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுடன் பாதுகாக்கக்கூடாது. எங்களின் காப்பீடு செய்யப்பட்ட ரீபவுண்ட் நன்மை மூலம், தீர்ந்து போன உங்கள் மருத்துவக் காப்பீட்டை நீங்கள் மீட்டெடுக்கலாம்.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு
நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தை திட்டமிடுவதைப் போல், எதிர்பாராத மருத்துவ செலவுகளை திட்டமிடுவது முக்கியமாகும். மூத்த குடிமக்களுக்கான எங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் மாற்று சிகிச்சையை பெறுவதற்கான விருப்பமாக ஆயுஷ் நன்மைகளை பெறுங்கள்.
தனிநபர்கள் பராமரிப்பு
வாழ்க்கையில் எப்போதும் கவலையில்லாமல், இளமையாக ஆர்வமுடன் செயல்படுங்கள், இருப்பினும் நீங்கள் உண்மையிலேயே கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது, அது எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஆகும், இது எந்த வாழ்க்கைமுறை நோய்களாலும் ஏற்படலாம். செலவு குறைந்த பிரீமியங்களைப் பெற தனிநபர் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை முன்கூட்டியே வாங்கவும்.
தீவிர நோய் பராமரிப்பு
ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது போலவே, ஒரே அடிப்படை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் புற்றுநோய், பக்கவாதம் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய்களுக்கு காப்பீடு செய்ய போதுமானதாக இருக்காது. 13 க்கும் மேற்பட்ட தீவிர நோய்களை உள்ளடக்கிய எங்கள் தீவிர நோய் மருத்துவ காப்பீடு திட்டத்தை வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கொரோனா கவச் பாலிசியுடன் காப்பீட்டில் மருத்துவ பராமரிப்பை புரிந்துகொள்ளுதல்

1.3 கோடி மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களால் நம்பிக்கை பெற்றுள்ளது

எச்டிஎஃப்சி எர்கோ #1.3 கோடிக்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது

வீட்டு மருத்துவ பராமரிப்பு செலவுகள்

கொரோனா கவச் பாலிசி-யின் கீழ் வீட்டு பராமரிப்பு செலவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம், இது ஒரு காப்பீட்டாளர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு அதற்காக வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது செலுத்தப்படும்.

மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு முந்தைய செலவுகள்

மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், அதாவது மருத்துவமனையில் சேர்ப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னர் மற்றும் டிஸ்சார்ஜ் செய்த 30 நாட்கள் வரை, திருப்பிச் செலுத்தப்படும். வீட்டு சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ செலவுகள் 14 நாட்கள் வரை காப்பீடு செய்யப்படும்.

10,000 ரொக்கமில்லா நெட்வொர்க் மருத்துவமனைகள்

10,000 க்கும் மேற்பட்ட ரொக்கமில்லா நெட்வொர்க் மருத்துவமனைகளுடன், உங்கள் இருப்பிடத்தில் சிறந்த சிகிச்சையை கண்டறிவது எளிதானது.

விரைவான கிளைம் செட்டில்மென்ட்

ஒவ்வொரு நிமிடமும் 1 கிளைம் செட்டில் செய்யப்படுகிறது.

அவசர பராமரிப்பு தேவையா? டெலிகிளினிக் சேவைகளை முயற்சிக்கவும்



இந்தச் சமயங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்குப் பதற்றமாக உணர்கிறீர்களா - மருத்துவரை சந்திக்க வேண்டுமா? எச்டிஎஃப்சி எர்கோ இன்சூரன்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து M. B. B. S பொது மருத்துவர்களிடமிருந்து, எந்த நேரத்திலும், எங்கிருந்தும், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தொற்றுநோய் காலகட்டதின்போதும் இலவசமாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.. எங்களின் டெலிக்ளினிக் சேவைகள் நீங்கள் அனுபவிக்கும் அனைத்து வகையான நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றன. கடுமையான தலைவலி முதல் வலிமிகுந்த பல்வலி வரை எதையும், இந்த கடினமான காலங்களில் எங்கள் மருத்துவர்கள் நிச்சயமாக புரிந்துகொண்டு உங்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவார்கள்.. இந்த நேரத்தில் உதவியாக இருக்க இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்! தற்போதைய தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு இது தேவைப்படலாம்.



உங்களிடம் ஏற்கனவே எச்டிஎஃப்சி எர்கோ உடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தால், கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கான செலவுகளை நாங்கள் உள்ளடக்குவோம் என்று உறுதியாக இருங்கள்.

குறிப்பு: எச்டிஎஃப்சி எர்கோ வழங்கும் ஒவ்வொரு பாலிசியும் விபத்து அல்லாத மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு எதிராக கோரல் செய்வதற்கு ஒரு மாத காத்திருப்பு காலத்துடன் வருகிறது. சேர்த்தல் மற்றும் விலக்குகளின் விரிவான பட்டியலுக்கு, உங்கள் பாலிசி விதிமுறைகள், புரோஷரை தயவுசெய்து பார்க்கவும். மேலே உள்ள தகவல் விளக்க நோக்கங்களுக்கானது.

எங்கள் வாடிக்கையாளர் கூறுவது என்ன

பிரவீன் குமார் கே
மை:ஹெல்த் சுரக்‌ஷா
காம்-ப்ரீ
  • நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கிறேன், உங்கள் சேவை நன்றாக மற்றும் விரைவாக இருந்தது, வாடிக்கையாளர் சேவை மிகவும் சிறப்பு.
பிபின் புரோஹித்
மை:ஹெல்த் சுரக்‌ஷா
காம்-ப்ரீ
  • சேவைகள் குறித்து நான் முற்றிலும் திருப்தியடைகிறேன். கோவிட்19 தொற்று காலத்திலும் டோல் ஃப்ரீ இணைப்பு மற்றும் IVR இணைப்பு வேலை செய்தது. எச்டிஎஃப்சி வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளின் தகவல்தொடர்பு மிகவும் உதவுகிறது.
ஸ்வேதா ஆர்
மை:ஹெல்த் சுரக்‌ஷா
காம்-ப்ரீ
  • எங்கள் இமெயில் கோரிக்கையின்படி நீங்கள் எங்கள் கோரல்களை செயல்முறைப்படுத்தியதற்கு மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் இமெயிலை கருத்தில் கொண்டு அதற்கு பதிலளித்ததற்கு நன்றி. எங்கள் கோரல் அங்கீகரித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
பிரமோத் மகாதேவ் தனவாடே
மை:ஹெல்த் சுரக்‌ஷா
காம்-ப்ரீ
  • உங்கள் நிர்வாகிகளால் பாராட்டத்தக்க சேவைகள் வழங்கப்பட்டன.
சைலேந்திர குமார் ரத்
மை:ஹெல்த் சுரக்‌ஷா
காம்-ப்ரீ
  • சிறந்த சேவை, கோரலை செட்டில் செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே எடுக்கப்பட்டன, உங்கள் சேவையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
x