சுகாதாரக் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆம். நீங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வரைக்கும் மட்டுமே உங்களின் ஊழியர் மருத்துவ காப்பீடு உங்கள் மருத்துவச் செலவுகளை காப்பீடு செய்யும் என்பதால் உங்களுக்கு தனிநபர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தேவை. அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளை பார்க்கும் போது, ஒரு தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டிருப்பது முக்கியமாகும், இது பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவ திட்டத்தைப் போலல்லாமல் உங்கள் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யலாம்.

போர்ட்டபிலிட்டி உங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்ற உதவுகிறது, இதனால் புதிய காத்திருப்பு காலம் உங்களுக்கு தேவை இருக்காது, உங்கள் தற்போதைய திட்டம் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளை உள்ளடக்கவில்லை என்றால் ஒரு காப்பீட்டாளரிடமிருந்து மற்றொரு காப்பீட்டாளருக்கு நீங்கள் சுலபமாக மாறிக்கொள்ளலாம்.

முன்பே இருக்கும் நோய் என்பது நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை வாங்கும் போது ஏற்கனவே இருக்கும் ஒரு உடல்நிலை, நோய் அல்லது காயம் ஆகும், மேலும் இந்த PEDகள் பொதுவாக ஆரம்பக் காத்திருப்பு காலத்தில் பாலிசி காப்பீட்டில் இருந்து விலக்கப்படுகின்றன. இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, ஆஸ்துமா போன்றவையாக இருக்கலாம்

ரொக்கமில்லா மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை என்பது காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அல்லது அறுவை சிகிச்சையின் போது அவரது தரப்பில் இருந்து மருத்துவச் செலவுகளை செலுத்த வேண்டியதில்லை . இருப்பினும், டிஸ்சார்ஜ் செய்யும்போது நீங்கள் சில விலக்குகள் அல்லது மருத்துவம் அல்லாத செலவுகளை செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு அறுவை சிகிச்சைக்கு திட்டமிடும்போது நோய் கண்டறிதல் செலவு, ஆலோசனைகள் போன்ற சில குறிப்பிட்ட மருத்துவமனை செலவுகள் உள்ளன, அதேபோல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் காப்பீடு செய்யப்பட்ட நோயாளியின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கு இதே போன்ற செலவுகள் ஏற்படலாம், அத்தகைய செலவுகள் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளாக கருதப்படுகின்றன.

ஆம், ஒரு மருத்துவ காப்பீட்டை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். மேலும், சில மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் உங்களுக்கு ஏற்கனவே ஏதாவது சுகவீனம் இருந்தால் அல்லது உங்கள் வயது 40 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே அதை கேட்கின்றன.

பாலிசியை வாங்கும் நேரத்தில் அல்லது புதுப்பித்தல் நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சேர்க்கலாம்.

பிறந்து 90 நாட்களுக்குப் பிறகு 21 ஆண்டுகள் வரை உங்கள் குழந்தையை நீங்கள் சேர்க்கலாம்.

நீங்கள் குறைந்த பிரீமியம் செலுத்தி அதிக நன்மைகளை பெற முடியும். முன்பிருந்தே இருக்கும் நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவாக உள்ளது, எனவே காத்திருப்பு காலம் உங்களை பாதிக்காது. மேலும், ஃப்ளூ மற்றும் விபத்து காயம் போன்ற பொதுவான நோய்கள் எந்த வயதிலும் ஏற்படலாம், எனவே நீங்கள் இளம் வயதில் காப்பீடு செய்வது அவசியம்.

முடியும். ஒவ்வொரு திட்டமும் வேறுபட்ட பல்வேறு நன்மைகளை வழங்குவதால் தேவை மற்றும் காப்பீட்டு தேவைகளின் அடிப்படையில் நீங்கள் எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பெறலாம்.

காத்திருப்பு காலம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்காக உங்கள் காப்பீட்டு வழங்குநரிடமிருந்து சில அல்லது அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கான கோரிக்கையை நீங்கள் பதிவு செய்ய முடியாத காலமாகும். இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் ஒரு கோரலை தாக்கல் செய்வதற்கு முன்னர் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஃப்ரீ லுக் காலத்தின் போது, உங்கள் பாலிசி பயனுள்ளதாக இல்லை என்று நீங்கள் கருதினால் அபராதம் இல்லாமல் உங்கள் பாலிசியை இரத்து செய்வதற்கான விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது. காப்பீட்டு நிறுவனம் மற்றும் வழங்கப்படும் திட்டத்தைப் பொறுத்து, ஃப்ரீ லுக் பீரியட் 10-15 நாட்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.

நெட்வொர்க் மருத்துவமனைகள் பெரும்பாலும் ரொக்கமில்லா மருத்துவமனைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டவை, இதனால் நீங்கள் இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் எந்தவிதமான பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் செலவுகளுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஆனால் நீங்கள் ஒரு நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது நீங்கள் முதலில் பணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எப்போதும் எச்டிஎஃப்சி எர்கோ போன்ற ஒரு பெரிய நெட்வொர்க் மருத்துவமனை டை-அப் கொண்ட ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். இவர்களிடம் 10,000+ ரொக்கமில்லா மருத்துவமனை நெட்வொர்க் உள்ளன.

காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்ப முடியாத நிலையில் இருக்கும்போதோ அல்லது மருத்துவமனையில் போதுமான அறைகள் இல்லாததால் அவருக்கு வீட்டிலேயே சிகச்சை அளிக்கப்படும் பட்சத்தில் அத்தகைய சிகிச்சையை வீட்டு மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சை என்று குறிப்பிடுகின்றனர்.

மருத்துவமனையில் சேர்ப்புக்கான காப்பீட்டில், உங்களுக்கான நோயை கண்டறியும் சோதனைகள், ஆலோசனைகள் மற்றும் மருந்து செலவுகள் போன்ற மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள செலவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம். நாங்கள் ICU, படுக்கை கட்டணங்கள், மருத்துவ செலவு, நர்சிங் கட்டணங்கள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செலவுகளையும் பரந்தளவில் உள்ளடக்குகிறோம்.

உங்களுக்கு 18 வயதானவுடன் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் வாங்கலாம். அதற்கு முன்னர் உங்கள் குடும்ப காப்பீட்டுத் திட்டத்தில் நீங்கள் காப்பீடு பெறலாம்.

இல்லை. வயது குறைந்தவர்களால் மருத்துவ காப்பீட்டை தனிப்பட்ட முறையில் வாங்க முடியாது, இருப்பினும் பெற்றோர்கள் அவர்களின் ஃபேமிலி ஃப்ளோட்டர் மருத்துவ காப்பீட்டின் கீழ் குழந்தையை காப்பீடு செய்யலாம்.

நெட்வொர்க்-அல்லாத மருத்துவமனை ஒன்றில் நீங்கள் சேர்க்கப்படும் போதெல்லாம் முதலில் மருத்துவமனை கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும், பின்னர் செலவிற்கான தொகையை திரும்பப் பெறுவதற்கான கோரலை தாக்கல் செய்ய வேண்டும். எப்போதும் எச்டிஎஃப்சி எர்கோ போன்ற ஒரு பெரிய நெட்வொர்க் மருத்துவமனை டை-அப் கொண்ட ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். இவர்களிடம் 10,000+ ரொக்கமில்லா மருத்துவமனை நெட்வொர்க் உள்ளன.

உங்கள் வங்கி மூலம் வழங்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், வாலெட்/கேஷ் கார்டு, EMI, UPI (ஜிபே, போன்பே, பேடிஎம், போன்றவை), QR குறியீடு மூலமாக உங்கள் பாலிசி பிரீமியத்தை நீங்கள் செலுத்தலாம். தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும், எந்தவொரு கிளப் கார்டு அல்லது டைனர்ஸ் கார்டு மூலம் பணம்செலுத்தலை நாங்கள் ஏற்க மாட்டோம்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்
best_bfsi_2011 best_employer_brand best_employer_brand_2012 best_employer_brand_besi_2012 bfsi_2014 cfo_2014 IAAA icai_2013 icai_2014 icai_2015 icai_2016 iir_2012 iir_2016
x